வணிகம்

அமுல் பால் நிறுவன பொருட்களின் விலை 4-5% உயர்வு

Veeramani

இந்தியாவின் மிகப்பெரிய பால் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான அமுல் தனது தயாரிப்புகளின் விலையை 4-5% உயர்த்தியுள்ளது.

உலகில் மிகப்பெரிய அளவில் பால் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா உள்ளது. இந்தியாவின் முன்னணி பால் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமாக குஜராத்தை தலைமையிடமாக கொண்ட அமுல் நிறுவனம் உள்ளது.இந்தியாவில் கொரோனா பாதிப்பின் தாக்கம் அதிகம் இருந்ததால் சென்ற ஆண்டு அமுல் நிறுவத்தின் பால்பொருட்களின் விலையை உயர்த்தவில்லை. கடந்த ஆண்டை விட பால்பொருட்களுக்கான தேவை அதிகரித்திருப்பதால் இந்தியாவின் மிகப்பெரிய பால் பொருட்கள் தயாரிப்பாளரான அமுல் தனது பொருட்களின் விலையை 4-5% உயர்த்தியுள்ளதுஎன்று அமுல்-பிராண்டட் நிர்வாக இயக்குநர் ஆர்எஸ் சோதி தெரிவித்தார்.

மேலும், “கடந்த ஆண்டைவிடவும் இந்த ஆண்டில் விற்பனை சிறப்பாக உள்ளது.  தற்போது பால்பொருட்கள் விலை உயர்த்தப்பட்ட பிறகும், முந்தைய ஆண்டை விடவும் இந்த ஆண்டில் விற்பனை 12-13% அதிகரித்திருக்கிறது . மார்ச் 2021 உடன் முடிவடைந்த நிதியாண்டில் அமுல் நிறுவனத்தின் வருவாய் 1.7% உயர்ந்து ரூ.39,200 கோடியாக உள்ளதுஎனவும் அவர் தெரிவித்தார்