ரபோபேங்கின் குளோபல் டாப் 20 பால் நிறுவனங்கள் பட்டியலில் நுழைந்த முதல் இந்திய பால் நிறுவனமாக மாறியுள்ளது “அமுல்”. 5.5 பில்லியன் டாலர் வருட வருவாயுடன் இந்த பட்டியலில் 16வது இடத்தைப்பெற்றுள்ளது அமுல்.
அமுல் (குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு) நிறுவனம், ரபோபேங்கின் உலகளாவிய சிறந்த 20 பால் நிறுவனங்களின் பட்டியலில் நுழைந்த முதல் இந்திய பால் நிறுவனம் என்ற பெருமையை பெற்றுள்ளது. 5.5 பில்லியன் டாலர் வருடாந்திர வருவாயுடன் அமுல் இந்த பட்டியலில் 16 வது இடத்தை பெற்றுள்ளது. "குஜராத்திலுள்ள 36 லட்சம் பால் உற்பத்தியாளர்களுக்கு இந்த செய்தி பெருமை அளிக்கிறது" என்று அமுல் நிறுவனம் கூறியுள்ளது. 22.1 பில்லியன் டாலர் வருவாயுடன் சுவிட்சர்லாந்தின் நெஸ்லே நிறுவனம் இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.