வணிகம்

அமேசான் நிறுவனத்துக்கு தடை விதியுங்கள் - அகில இந்திய வர்த்தகர் கூட்டமைப்பு கோரிக்கை

webteam

அமேசான் நிறுவனத்தின் ஆன்லைன் வர்த்தகத்துக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த வர்த்தகர்கள் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் பிரவீன் கண்டேல்வால், பிற நிறுவனங்கள் போட்டியிட முடியாத அளவுக்கு பொருட்களின் விலையை குறைத்து தருவதன் மூலம் சந்தையில் சீர்குலைவை ஏற்படுத்துவதாக அமேசான் மீது குற்றஞ்சாட்டினார். எனவே அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் நிறுவனங்களின் வணிக நடைமுறை குறித்து அரசு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கண்டேல்வால் கோரிக்கை விடுத்தார்.

அன்னிய முதலீட்டு விதிகளை இந்நிறுவனங்கள் மீறுகின்றனவா என ஆய்வு செய்ய மத்திய வர்த்தக அமைச்சர் பியுஷ் கோயலுக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் கண்டேல்வால் தெரிவித்தார். வர்த்தகர்கள் கூட்டமைப்பின் கோரிக்கை குறித்து அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் தரப்பிலிருந்து விளக்கம் எதுவும் வெளியாகவில்லை