வணிகம்

ஆகாசாவுக்கு அனுமதி: ஜூலை இறுதியில் விமானப் போக்குவரத்து தொடக்கம்

webteam

முதலீட்டாளார் ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் முதலீட்டில் தொடங்கப்பட்டிருக்கும் ஆகாசா விமான நிறுவனத்துக்கு விமான போக்குவரத்து துறை அமைச்சகத்தின் அனுமதி கிடைத்திருக்கிறது. வர்த்தக செயல்பாட்டினை தொடங்குவதற்கான அனுமதியை வழங்கப்பட்டிருக்கிறது. இதனால் ஜூலை இறுதியில் இதன் செயல்பாடு தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த ஜூன் 21-ம் தேதி முதல் விமானத்தை (போயிங் 737 மேக்ஸ்) போயிங் நிறுவனத்திடம் பெற்றுகிறது. ஜூலையில் இறுதியில் செயல்பாடு தொடங்கும் என ஆகாசா ஏர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி வினய் துபே தெரிவித்திருக்கிறார்.

நடப்பு நிதி ஆண்டு முடிவுக்குள் 18 விமானங்கள் இணையும் என்றும், அதனை தொடரந்து ஆண்டுக்கு 12 முதல் 14 விமானங்கள் இணையும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. திட்டமிட்டபடி அடுத்த ஐந்தாண்டுகளில் 72 விமானங்கள் ஆகாசா வசம் இருக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சில நாட்களுக்கு முன்பு விமான பணியாளர்களுக்கான சீருடையை அறிமுகம் செய்தது.

ஏற்கெனவே பல விமான நிறுவனங்கள் இருக்கும் போது புதிய நிறுவனம் தேவையா என்னும் கேள்விக்கு, இந்தியாவில் நடுத்தர மக்கள் 30 கோடி என்னும் அளவில் உள்ளனர். அடுத்த பத்தாண்டுகளில் இந்த எண்ணிக்கை 45 கோடியாக உயரும். அப்போது தற்போது இருக்கும் விமானங்களின் எண்ணிக்கையை விட கூடுதலாக 100 விமானங்கள் தேவைப்படும் என வினய் துபே தெரிவித்திருக்கிறார்.

முதல் கட்டமாக மெட்ரோவில் இருந்து இரண்டாம் மற்று மூன்றாம் கட்ட நகரங்களுக்கு செயல்பாட்டை தொடங்க இருக்கிறது. படிப்படியாக அனைத்து நகரங்களுக்கு விரிவுப்படுத்த திட்டமிட்டிருக்கிறது. அடுத்த ஆண்டுக்கு இறுதிக்குள் வெளிநாடுகளில் விமானத்தை இயக்குவதற்கான திட்டத்தை வைத்திருக்கிறது ஆகாசா.