வணிகம்

ஏர்டெல் புதிய பிரிபெய்டு ஆஃபர் : ஒரு வருடத்திற்கு 'ஹாட் ஸ்டார்' சப்ஸ்கிரைப்

webteam

ஏர்டெல் நிறுவனம் தங்கள் புதிய பிரிபெய்டு பிளானுடன் ஹாட் ஸ்டார் மற்றும் டிஸ்னி பிளஸ் சப்ஸ்கிரைப் சலுகையையும் வழங்கியுள்ளது.

ஊரடங்கு காலத்தில் இண்டர்நெட் டேட்டாக்களின் சேவை அதிகரித்துள்ளதால், ஏர்டெல், ஜியோ உள்ளிட்ட நெட்வொர்க் நிறுவனங்கள் புதிய பிளான்களை அறிவித்து வருகின்றன. ஜியோ நிறுவனம் ஊரடங்கு காலத்தில் வீட்டிலிருந்து பணிபுரிவோர்களுக்காக பிரத்யேகமாக ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ என்ற பிளானை வெளியிட்டது.

அத்துடன் ஊரடங்கு காலத்தில் ரிசார்ஜ் செய்ய முடியாமல் வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் சிக்கிக்கொண்ட தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளுக்காக அனைத்து நெட்வொர்க் நிறுவனங்களும் தங்கள் பிரிபெய்டு வெலிடிட்டி கால அவகாசத்தை நீட்டித்தன. குறிப்பாக, ஸ்மார்ட்போன் அல்லாதவர்களுக்கும் சலுகைகள் வழங்கப்பட்டன.

இந்த வகையில் தற்போது புதிய பிரிபெய்டு பிளான் ஒன்றை ஏர்டெல் அறிவித்துள்ளது. ஊரடங்கு காலத்தில் வீட்டிலேயே ஹாட் ஸ்டார், டிஸ்னி பிளஸ் ஆகிய வலைத்தளங்கள் மூலம் படம் மற்றும் வெப் சீரியஸ்கள் பார்ப்பவர்களை கவரும் வகையில் இந்த பிளான் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, ரூ.401க்கு ரிசார்ஜ் செய்தால் 3 ஜிபி டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படும். அதனுடன் ஒரு வருடத்திற்கான ஹாட் ஸ்டார் மற்றும் டிஸ்னி பிளஸ் சப்ஸ்கிரைப்ஷன் அளிக்கப்படும் எனப்பட்டுள்ளது.

இதேபோன்று ரூ.349க்கு ரிசார்ஜ் செய்தால் 28 நாட்களுக்கு தினந்தோறும் 2 ஜிபி டேட்டாவும், அத்துடன் 28 நாட்கள் அமேசான் பிரைம் பிரைம் மெம்பர்ஷிப்பும் வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இதில் அமேசான் பிரைம்க்கு பதிலாக ஷீ5 பிரிமியம் வேண்டும் என்பவர்களும் தேர்வு செய்துகொள்ளலாம்.