வணிகம்

வெளிநாட்டு நிறுவனமாக மாறுகிறது ஏர்டெல்?

jagadeesh

வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து 4 ஆயிரத்து 900 கோடி ரூபாய் முதலீடுகளை பெற ஏர்டெல் நிறுவனம் மத்திய அரசிடம் ஒப்புதல் கேட்டுள்ளது. 

இதன் மூலம் அந்நிறுவனம் முழுமையும் வெளிநாட்டு நிறுவனமாக மாற உள்ளது. சிங்கப்பூர் நாட்டின் சிங்டெல் உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து 4 ஆயிரத்து 900 கோடி ரூபாய் முதலீடை பெற ஏர்டெல் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் ஏர்டெல்லில் அதன் நிறுவனரான சுனில் பார்தி மிட்டலின் பங்கு 50 சதவிகிதத்திற்கு கீழ் குறையும் நிலையில் வெளிநாட்டு நிறுவனங்களின் பங்கு 50 சதவிகிதத்திற்கு மேல் உயரும். 

இதனால் ஏர்டெல் வெளிநாட்டு நிறுவனமாக மாறு‌ம். ரிலையன்ஸ் ஜியோ வருகைக்கு பின் பிற செல்போன் சேவை நிறுவனங்கள் பெரும் நெருக்கடியை சந்தித்து வருகின்றன. இந்நிலையில் வெளிநாட்டு நிறுவனமாக மாற ஏர்டெல் முடிவு எடுத்துள்ளது