வணிகம்

வாடிக்கையாளர்களை கவர புது ஆஃபரை அறிவித்தது ஏர்டெல்

வாடிக்கையாளர்களை கவர புது ஆஃபரை அறிவித்தது ஏர்டெல்

Rasus

ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை கவர 198 ரூபாய்க்கு தினந்தோறும் 1ஜிபி 4ஜி டேட்டா வீதம் 28 நாட்களுக்கு மொபைல் டேட்டாவை வழங்குகிறது.

கடந்த ஆண்டு தொலைத்தொடர்பு சேவையில் ஜியோவின் வருகை பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியது. அதிரடியாக சலுகைகளால், ஏராளமான வாடிக்கையாளர்களை ஜியோ தன்வசப்படுத்தியது. இதனால் மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தங்களது வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்ள பல்வேறு சலுகைகளை அவ்வப்போது அறிவிக்க ஆரம்பித்தன. வோடஃபோன் நிறுவனம் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ரூ.199-க்கு ஒருநாளைக்கு ஒரு ஜிபி டேட்டாவும், அன்லிமிடட் கால்ஸ் ஆஃபரும் அண்மையில் வழங்கியது.

இந்நிலையில் ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை கவர 198 ரூபாய்க்கு தினந்தோறும் 1ஜிபி 4ஜி வீதம் 28 நாட்களுக்கு மொபைல் டேட்டாவை வழங்குவதாக அறிவித்துள்ளது. ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் தான் இந்த சலுகை பொருந்தும். ஏர்டெல்லின் ரூ.199 பிளானில் 1ஜிபி டேடாவுடன் இலவச அன்லிமிடெட் கால் வசதி 28 நாட்களுக்கு உண்டு. ஆனால் 198 ரூபாய் பிளானில் இலவச கால்வசதி இல்லாதது பின்னடைவாக பார்க்கப்படுகிறது.