ஏர்டெல் நிறுவனம் தனது போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு அடுத்த 3 மாதத்திற்கு 30 GB இலவச டேட்டா வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.
மை ஏர்டெல் ஆப் மூலம் பதிவு செய்பவர்களுக்கு இச்சலுகை வழங்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோ தரும் கடும் போட்டியை சமாளிக்க மற்ற செல்ஃபோன் நிறுவனங்கள் தொடர்ந்து சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு அளித்து வருகின்றன.