வணிகம்

ரூ.251, ரூ.98-க்கு புதிய பிரிபெய்டு பிளான் : ஏர்டெல் வெளியீடு

webteam

ஏர்டெல் நிறுவனம் ரூ.251 மற்றும் ரூ.98க்கு புதிய பிரிபெய்டு டேட்டா திட்டங்களை அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் 4வது கட்டமாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு, மே 31ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு தளர்வு தற்போது அறிவிக்கப்பட்டிருந்தாலும், இந்தியாவில் இன்னும் பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தியுள்ளனர். இதனால் இந்தியாவில் மொபைல் டேட்டாக்களின் தேவை பலமடங்கு அதிகரித்துள்ளது. இதை புரிந்துகொண்டு அனைத்து நெட்வொர்க் நிறுவனங்களும் பல்வேறு புதிய டேட்டா பிளான்களை அறிவித்துள்ளன.

அந்த வகையில் ஏர்டெல் நிறுவனம் தற்போது ரூ.251 மற்றும் ரூ.98 ஆகிய இரண்டு புதிய பிரிபெய்டு டேட்டா பிளான்களை அறிவித்துள்ளது. இந்தப் புதிய பிளானின்படி ரூ.251க்கு ரிசார்ஜ் செய்தால் 50 ஜிபி 4ஜி டேட்டா வழங்கப்படும். இதற்கு எந்தக் கால அவகாசமும் கிடையாது. ஏற்கனவே வாடிக்கையாளர்கள் போட்டியிருக்கும் பிரிபெய்டு பிளானின் டேட்டாவுடன் இந்த 50 ஜிபி கூடுதலாகச் சேர்த்துக்கொள்ளப்படும். அதேசமயம் இந்த பிளானின் மூலம் போன் கால் பேசவோ அல்லது எஸ்.எம்.எஸ் அனுப்பவோ எந்த ஆஃபரும் வழங்கப்படவில்லை.

இதேபோன்று ரூ.98க்கு ரிசார்ஜ் செய்தால் 12 ஜிபி டேட்டா, ஏற்கனவே உள்ள பிரிபெய்டு பிளானுடன் கூடுதலாகச் சேர்க்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.