வணிகம்

ரூ.279, ரூ.379 விலையில் புதிய பேக்கேஜ் - ஏர்டெல் அறிவிப்பு

webteam

அன்லிமிடெட் போன் கால்ஸ் மற்றும் ரூ.1.5 ஜிபி டேட்டாவுடன் புதிய ஆஃபரை ஏர்டெல் அறிவித்துள்ளது.

செல்போனின் தொலைத்தொடர்பு சிம் நிறுவனமான பார்தி ஏர்டெல் இன்று இரண்டு புதிய ரீசார்ஜ் பேக்கேஜ்களை அறிவித்திருக்கிறது. பிரிபெய்டு வாடிக்கையாளர்களுக்கான இந்த பேக்கேஜ்கள் ரூ.279 மற்றும் ரூ.379 விலை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ரூ.279-க்கு ரீசார்ஜ் செய்தால், அனைத்து நெட் ஒர்க்குகளுக்கும் அன்லிமிடெட் போன் கால்ஸ் மற்றும் 1.5 ஜிபி டேட்டா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தினந்தோறும் 100 எஸ்.எம்ஸ்.எஸ் அனுப்பிக்கொள்ளலாம் எனவும், இந்த பேக்கேஜ் 28 நாட்களுக்கானது எனவும் கூறப்பட்டுள்ளது.

இதேபோன்று ரூ.379-க்கு செய்யும் வாடிக்கையாளர்கள் 84 நாட்களுக்கு அனைத்து நெட் ஒர்க்குகளுக்கும் அன்லிமிடெட் போன் கால்ஸ் பேசிக்கொள்ளலாம். அத்துடன் 6 ஜிபி டேட்டாவும் வழங்கப்படும். மேலும், 900 இலவச எஸ்.எம்.எஸ்கள் அனுப்பிக்கொள்ளலாம். இதுதவிர ஃபாஸ்டாக்கில் ரூ.100 வரை கேஷ்பேக் பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏர்டெல் தங்கள் வாடிக்கையாளர்களின் மாதாந்திர அடிப்படை சேவைக் கட்டணத்தை ரூ.35 லிருந்து ரூ.45 ஆக உயர்த்தியது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த இரண்டு புதிய பேக்கேஜ்களை அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் புத்தாண்டை முன்னிட்டு, ‘ரூ.2020’ என்ற ஆஃபரை ஜியோ நிறுவனம் அறிவித்ததும் கவனத்தில் கொள்ளத்தக்கது.