வணிகம்

ஏர்டெலின் நியூ ஆஃபர்... ஏப்., 1 முதல் நடைமுறைக்கு வருகிறது?

ஏர்டெலின் நியூ ஆஃபர்... ஏப்., 1 முதல் நடைமுறைக்கு வருகிறது?

webteam

பிரபல தொலைதொடர்பு நிறுவனமான ஏர்டெல், அனைத்து விதமான உள்நாட்டு ரோமிங் கட்டணங்களையும் ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் இது நடைமுறைக்கு வரும் எனவும் ஏர்டெல் அறிவித்துள்ளது.

செல்போன் அழைப்புகள், குறுந்தகவல்கள் என அனைத்து விதமான உள்நாட்டு ரோமிங் கட்டணங்களும் நீக்கப்படுவதாக ஏர்டெல் தெரிவித்துள்ளது. வெளிநாட்டு அழைப்புகளுக்கான கட்டணமும் 90 சதவிகிதம் குறைக்கப்பட்டு ஒரு நிமிடத்திற்கு 3 ரூபாய் என்ற அளவில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.