நாட்டின் விவசாய வளர்ச்சி அரசு எதிர்பார்த்த அளவான 4.1 சதவிகித முன்னேற்றம் கண்டிருப்பதாக பொருளாதார விவகாரத் துறைச் செயலாளர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரி வசூலைப் பொறுத்தவரை அரசு நிர்ணயித்த இலக்கைத் தாண்டி விட்டதாகவும் கூறினார். நவம்பர் மாதத்தில் மாநிலங்கள் மதிப்புக் கூட்டு வரி வசூலை அதிகரித்திருப்பதாகவும் சக்தி காந்த தாஸ் தெரிவித்தார். மத்திய அரசு எடுக்கவுள்ள நடவடிக்கைகளை பட்ஜெட்டும் அதற்கு முந்தைய பொருளாதார ஆய்வறிக்கையும் தெளிவுபடுத்தும் என்றும் அவர் கூறினார்.