வணிகம்

பொதுமுடக்க எதிரொலி : 600 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ஊபர்..!

பொதுமுடக்க எதிரொலி : 600 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ஊபர்..!

webteam

கொரோனா பொதுமுடக்கத்தின் எதிரொலியால் ஓட்டுநர்கள் உட்பட 600 ஊழியர்களை ஊபர் நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது.

கொரோனா வைரஸ் எதிரொலியால் உலகில் பெரும்பாலான நாடுகளில் பொதுமுடக்கம் அலபடுத்தப்பட்டுள்ளது. இதனால் உலக அளவில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான நிறுவனங்கள் வருமான இழப்பை சந்தித்துள்ளன. அந்த வகையில் இந்தியாவில் டாக்ஸி நிறுவனங்களான ஊபர், ஓலா உள்ளிட்டையும் சரிவடைந்தன.

இதனால் தங்கள் ஊழியர்களை ஓலா நிறுவனம் பணிநீக்கம் செய்தது. இதைத்தொடர்ந்து தற்போது ஊபர் நிறுவனமும் ஓட்டுநர்கள் உட்பட 600 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. அத்துடன் தங்கள் நிறுவன வேலைப்பாடுகளை 25% குறைத்துள்ளது. பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு 10 முதல் 12 வாரங்களுக்கான ஊதியம் வழங்கப்படும் எனவும், 6 மாதங்களுக்கான மருத்துவக் காப்பீடு அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவர்களுக்கு முடிந்த அளவு வெளிப்புற ஆதரவினையும் செய்து தர ஏற்பாடு செய்யப்படிருப்பதாக கூறப்பட்டுள்ளது. ஊபர், ஓலா மட்டுமின்றி ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான சொமோடோ மற்றும் சுவிக்கி ஆகியவையும் அண்மையில் ஆட்குறைப்பு செய்துள்ளன.