அதானி துறைமுகங்கள் நிறுவனம், இலங்கையின் முதல் இந்திய துறைமுக ஆபரேட்டராக மாற உள்ளது.
இலங்கையிலுள்ள கொழும்பு துறைமுகத்தில் மேற்கு கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்ய ஜான் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் இலங்கை துறைமுக ஆணையத்துடன் கூட்டு சேருவதாக, இந்தியாவை சேர்ந்த அதானி குழுமத்தின் துணை நிறுவனமான அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (APSEZ) நிறுவனம் தெரிவித்துள்ளது.
51% பங்குகளுடன், அதானி துறைமுக நிறுவனம் இலங்கையின் முதல் இந்திய துறைமுக ஆபரேட்டராக மாற உள்ளது. அதானி குழுமத்தின் துறைமுக நிறுவனம், தற்போது இந்தியாவின் மிகப்பெரிய துறைமுக மேம்பாட்டாளர் மற்றும் ஆபரேட்டராக உள்ளது குறிப்பிடத்தக்கது.