வணிகம்

NFT விற்பனையில் களம் இறங்கியுள்ளார் நடிகை சன்னி லியோன்!

EllusamyKarthik

பாலிவுட் சினிமா நடிகைகளில் ஒருவரான சன்னி லியோன், NFT விற்பனையில் களம் இறங்கியுள்ளார். https://sunnyleonenft.com/ என்ற தளத்தின் மூலம் தனது என்ட்ரியை தொடங்கியுள்ளார் அவர். இதன் மூலம் இந்திய நடிகர்கள் அமிதாப் பச்சன் மற்றும் ரஜினிகாந்தை தொடர்ந்து NFT-யில் என்ட்ரி கொடுத்துள்ள முதல் இந்திய நடிகையாகி உள்ளார் அவர். 

தனது NFT-களை மின்ட் செய்யவும் தொடங்கியுள்ளார் அவர். Misfitz என்ற பெயரின் கீழ் சுமார் 9,600 NFT கலெக்ஷன்களை சேகரித்து வைத்துள்ளார் சன்னி. இவை அனைத்தும் தனித்துவமானவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Ethereum பிளாக்செயின் முறையில் இவை மின்ட் செய்யப்பட்டுள்ளதாகவும் சன்னியின் வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று முக்கிய கேரக்டர்களை மட்டுமே மையமாக கொண்டு இந்த Misfitz டிசைன் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

NFT?

நம்மிடம் உள்ள போட்டோ, ஓவியங்கள் மாதிரியான கலை படைப்புகள் என அனைத்தையும் டிஜிட்டல் வடிவில் தனித்துவமாக பதிவு செய்வது தான் NFT. கிட்டத்தட்ட இது ஒரு காப்புரிமை போல. இதனை யார் பாரத்தாலும் அதற்கான உரிமையாளராக அதனை படைத்தவரோ அல்லது ஏலத்தில் பெற்றவரோ தான் இருக்க முடியும். 

“கிரிப்டோ கரன்சிக்கு நல்ல எதிர்காலம் இருப்பதாக நம்புகிறேன். NFT எனக்குள் இருக்கும் கலை ஆர்வத்தை பெருக்குவதாக நான் கருதுகிறேன். அதனால் இதில் இறங்கியுள்ளேன். இப்போதைக்கு இந்த கலெக்ஷன் எல்லாம் பிரைவட்டாக உள்ளது. விரைவில் பொது வெளியில் விற்பனைக்கு வரும்” என சன்னி லியோன் தெரிவித்துள்ளார். 

அவர் நேரடி தமிழ் மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.