வணிகம்

"நூல் விலையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்கின்றன" - துணிநூல் துறை அமைச்சர் காந்தி

Veeramani

பின்னலாடை தயாரிப்புக்கு முக்கிய மூலப்பொருளான நூலின் விலையை கட்டுக்குள் வைத்திடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருவதாக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்துள்ளார்.

நூலின் விலை உயர்ந்து வருவதாகவும் அதைக் குறைக்க நடவடிக்கை எடுக்குமாறும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில் அமைச்சர் ஆர்.காந்தி வெளியிட்டுள்ள பதிலறிக்கையில், ஒட்டுமொத்த ஜவுளித் தொழிலையும் பாதுகாக்கும்வகையில் நூல் விலையைக் கட்டுக்குள் வைக்க தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளைப் பட்டியலிட்டுள்ளார்.

பஞ்சு மற்றும் கழிவு பஞ்சு மீதான ஒரு சதவிகித செஸ் வரி முற்றிலும் ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகளையும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். கைத்தறி, விசைத்தறி மற்றும் பின்னலாடை தொழிலாளர்களுக்கு தொடர் வேலைவாய்பை உறுதி செய்யவும் தமிழ்நாடு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக ஆர்.காந்தி விளக்கியுள்ளார்.