வணிகம்

தமிழக வங்கி பணிகளில் 50% வெளிமாநிலத்தவர் - IBPS- இன் அறிவிப்பால் சர்ச்சை

sharpana

தமிழ்நாட்டில் வங்கிப் பணிகளுக்கு தமிழ் கட்டாயமில்லை என்ற வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனமான IBPS- இன் அறிவிப்பால் சர்ச்சை எழுந்துள்ளது.

வங்கிகளில் கிளர்க் பணிகளுக்கு மாநில அலுவல் மொழி கட்டாயமில்லை என வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனமான IBPS அறிவித்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதனால், தமிழ்நாட்டில் உள்ள வங்கிகளில் பணியாற்ற 843 பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டதில், சுமார் 400 பேர் வெளிமாநிலத்தவர் எனத் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக ஆங்கில நாளேடுக்கு பேட்டி அளித்துள்ள அகில இந்திய ஓரியன்டல் பேங்க் ஆப் காமர்ஸ் வங்கியின் தொழிலாளர் நலசங்கப் பொதுச் செயலாளர் ஜி.கருணாநிதி, ஆரம்பத்தில் தமிழ்நாட்டில் உள்ள வங்கிகளில் 20 முதல் 30 விழுக்காடு வெளிமாநிலத்தவர்களே பணியமர்த்தப்பட்டு வந்ததாகவும், தற்போது இந்த எண்ணிக்கை 50 விழுக்காடாக அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.