வணிகம்

காக்னிசன்ட் ஓய்வு திட்டம்: 400 நிர்வாகிகள் ஏற்பு

காக்னிசன்ட் ஓய்வு திட்டம்: 400 நிர்வாகிகள் ஏற்பு

webteam

முன்னணி கணினி மென்பொருள் நிறுவனமான காக்னிசன்ட் முன்வைத்த விருப்ப ஓய்வுத் திட்டத்தை அந்த நிறுவனத்தின் 400 மூத்த நிர்வாகிகள் ஏற்றுக் கொண்டுள்ளனர். 

உலகின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனம் காக்னிசன்ட். அமெரிக்காவை தலைமை இடமாகக் கொண்ட இந்நிறுவனத்தில் மொத்தம் 2,60,000 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இதில் இந்தியர்கள் மட்டும் 1,55,000 லட்சம் பேர். 

இந்நிறுவனத்தில் பணியாற்றும் மூத்த நிர்வாகிகளிடம், 9 மாத சம்பளத்தை மொத்தமாக வாங்கிக்கொண்டு ராஜினாமா செய்யும்படி அந்நிறுவனம் வலியுறுத்தியது. ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்கும் பொருட்டு ஆறு மாதத்துக்கு முன் இந்த விருப்ப ஓய்வு
திட்டத்தை அறிவித்தது. அதற்கு அப்போது கடும் எதிர்ப்புக் கிளம்பியது.

இந்நிலையில் இந்த விருப்ப ஓய்வு திட்டத்தை 400 மூத்த நிர்வாகிகள் இப்போது ஏற்றுக்கொண்டுள்ளனர். இதன் மூலம் அந்த நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 60 மில்லியன் டாலர் சேமிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.