வணிகம்

அறிமுகமாகிறது 2021 KTM டியூக் 890 பைக்... சிறப்பம்சங்கள் என்னென்ன?

அறிமுகமாகிறது 2021 KTM டியூக் 890 பைக்... சிறப்பம்சங்கள் என்னென்ன?

EllusamyKarthik

அண்மையில் பைக் ஆர்வலர்களுக்கு தனது தரிசனத்தை கொடுத்தது 2021 KTM டியூக் 890 பைக். டியூக் 790 பைக்கிற்கு மாற்றாக அறிமுகமாக உள்ளது இந்த டியூக் 890. கடந்த ஆண்டு 890 டியூக் R அறிமுகமாகியிருந்த நிலையில், டியூக் 890 பைக்கை கொண்டு வர முடிவு செய்துள்ளது பைக் தயாரிப்பு நிறுவனம். இந்த பைக்கின் சிறப்பம்சங்களை பார்க்கலாம். 

டிசைன் மற்றும் ஸ்டைலிங்கில் டியூக் 890 மற்றும் டியூக் 890 R பைக் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாகதான் உள்ளன. பைக்கிங் நிறம் மற்றும் கிராபிக்ஸ்தான் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒரு சில சின்ன வித்தியாசங்கள்தான் இரண்டு பைக்குகளுக்கும் உள்ளன. LC8 பேரலல் ட்வின் இன்ஜின் இந்த பைக்கில் இடம்பெற்றுள்ளது. 889 சிசி திறன் இந்த வாகனத்தில் உள்ளது. நான்கு டிரைவ் மோடுகளில் வண்டியை இயக்கும் வசதி, ABS அம்சமும் இடம்பெற்றுள்ளது. 

அடுத்த சில மாதங்களில் சர்வதேச அளவில் அறிமுகமாக உள்ள இந்த பைக் இந்தியாவில் இந்த ஆண்டின் இறுதியில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் எக்ஸ் ஷோரூம் விலை கிட்டத்தட்ட 9.5 லட்ச ரூபாய் இருக்கலாம் என சொல்லப்படுகிறது.