2021 ஹூண்டாய் கிரெட்டா 7 சீட்டர் கார் இந்த ஆண்டின் மையப்பகுதியில் அறிமுகமாகும் என எதிர்பாக்கப்படுகிறது. சொகுசு ரக மாடலாக களம் இறங்க உள்ளது ஹூண்டாய் கிரெட்டா 7 சீட்டர் காரின் இன்டீரியர் அமைப்பு தொடர்பான தகவல்கள் கசிந்துள்ளன. பிராண்ட் கிரில், டெயில் லேம்பில் ஆல்ட்ரேஷன், புதிய அல்லாய் வீல்கள் என சர்வ லட்சணமும் அடங்கிய SUV ரக காராக வெளியாகவுள்ளது.
இந்த மூன்றடுக்கு SUV ஆறு மற்றும் ஏழு சீட்டர் கொண்ட கார்களாக வெளிவர உள்ளதாம். பனோராமிக் சன் ரூப், வொயர்லெஸ் சார்ஜிங் வசதியும் இந்த காரில் இடம் பெற்றிருக்க வாய்ப்புகள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. கிரேட்டா 5 சீட்டரின் வேரியண்ட்டாக இது இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காரின் இன்டீரியர் படங்கள் அண்மையில் கசிந்திருந்தது. அதை வைத்து கார் பிரியர்கள் இதை தெரிவித்துள்ளனர்.