வணிகம்

ரிலையன்ஸுக்கு ரூ.1,700 கோடி அபராதம்

ரிலையன்ஸுக்கு ரூ.1,700 கோடி அபராதம்

webteam

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் அதன் கூட்டு நிறுவனங்களுக்கு மத்திய அரசு 1,700 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

2015-16 ஆம் ஆண்டில் கிருஷ்ணா கோதாவரி படுகையில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட குறைவாக இயற்கை எரிவாயு உற்பத்தி செய்ததற்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதே தவறுக்காக கடந்த 7 ஆண்டுகளாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸுக்கு அவ்வப்போது அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. தற்போதைய அபராதத்தோடு சேர்த்து ஒட்டுமொத்த அபராதத்தின் அளவு 20 ஆயிரம் கோடி ரூபாயை தொட்டுள்ளது. ஆனால் இவ்விவகாரத்தில் தனது தரப்பில் தவறில்லை என ரிலையன்ஸ் தெரிவித்து வருகிறது.