வணிகம்

11.44 லட்சம் பான் எண்கள் ரத்து - நிதியமைச்சகம் தகவல்

webteam

ஜூலை 27 ம் தேதி கணக்கீட்டின்படி 11.44 லட்சம் பான் எண்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ராஜ்யசபாவில் கேள்வி ஒன்றிற்கு எழுத்து மூலம் பதிலளித்த மத்திய நிதித்துறை இணையமைச்சர் சந்தோஷ் குமார் கங்குவார் தெரிவித்துள்ளார்.

அவர் அளித்துள்ள பதிலில், ஒரே நபருக்கு பல பான் எண்கள் வழங்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இது போன்ற பான் எண்கள் கண்டறியப்பட்டு, ரத்து செய்யப்பட்டுள்ளன. ஜூலை 27 வரை 11,44,211 பான் எண்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஒருவருக்கு ஒரு நிரந்தர வைப்பு கணக்கு எண் வழங்கப்பட வேண்டும் என்பதே விதி. இந்த விதி மீறப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதுவரை 1566 போலி பான் கார்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றை போலி பெயர் மற்றும் அடையாள சான்றுகள் கொடுத்து பெறப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இந்த போலி பான் எண்கள் 2004 முதல் 2007 வரை வழங்கப்பட்டது என்றும் அமைச்சர் சந்தோஷ் குமார் தெரிவித்தார்.