TATA IPL TATA IPL
'ஆப்' இன்றி அமையா உலகு

ஜியோஸ்டார் குறித்த புது அப்டேட்..!

ஜியோஸ்டார்: கைபேசியில் கிரிக்கெட் ஸ்ட்ரீமிங் மூலம் விளம்பரங்களின் ஈடுபாடு 8 மடங்கு அதிகரிப்பு

PT digital Desk

ஜியோஸ்டார் மொபைல் ஸ்ட்ரீமிங் தளம், நியூரான்ஸ் இன்க் நிறுவனத்துடன் இணைந்து நடத்திய நியூரோசயின்ஸ் ஆய்வு, கைபேசியில் நேரடி கிரிக்கெட் ஸ்ட்ரீமிங் விளம்பரங்களுக்கு சிறந்த தளமாக இருப்பதை நிரூபிக்கிறது. நேரடி கிரிக்கெட் போட்டிகளைப் பார்ப்பதற்கும், அதே நேரத்தில் விளம்பரங்களை அணுகுவோரின் உண்மையான பதில்களை ஆய்வு செய்ததில், விளம்பரங்கள் அதிக ஈடுபாடு, கவனம் மற்றும் நினைவாற்றலை உருவாக்குவதாக கண்டறியப்பட்டது.

இந்த ஆய்வில், ஒரே விளம்பரங்களை ஜியோஸ்டார் மொபைல் ஸ்ட்ரீமிங் தளத்திலும், பயனர் உருவாக்கிய வீடியோ தளத்திலும், படம் மையமான சமூக ஊடகத்திலும், சமூக அடிப்படையிலான தளத்திலும் ஒளிபரப்பி பயனர் நுண்ணறிவியல் மற்றும் நடத்தை தொடர்பான தரவுகளை மதிப்பீடு செய்யப்பட்டது. இதன் முடிவுகள் மிகத் தெளிவாகவும், கணிசமான வேறுபாடுகளைக் கொண்டதாகவும் இருந்தன.

முக்கிய கண்டுபிடிப்புகள்:

நேரடி கிரிக்கெட் ஸ்ட்ரீமிங் பார்க்கும் போது கைபேசியில் வரும் விளம்பரங்கள் பயனர் உருவாக்கிய வீடியோ தளங்களை விட 1.7 மடங்கு அதிக கவனத்தை பெற்றன.

படம் மையமாகக் கொண்ட சமூக ஊடகங்களை விட 4.1 மடங்கு அதிக கவனம் பெற்றன.

சமூகம் மையமாகச் செயல்படும் சமூக ஊடகங்களை விட 7.8 மடங்கு அதிக கவனம் பெற்றன.

ஈடுபாட்டின் தரவுகளின் அடிப்படையில், கைபேசியில் நேரடி கிரிக்கெட் பார்க்கும் போது விளம்பரங்கள்:

பயனர் உருவாக்கிய வீடியோ தளங்களை விட 2 மடங்கு அதிக ஈடுபாட்டை பெற்றன.

படம் மையமான சமூக ஊடகங்களை விட 2.7 மடங்கு அதிக ஈடுபாட்டை பெற்றன.
சமூகம் மையமாக செயல்படும் சமூக ஊடகங்களை விட 8 மடங்கு அதிக ஈடுபாட்டை பெற்றன.

2.2 மடங்கு பிராண்டு மீது நல்ல அபிப்ராயம் & வாங்கும் நோக்கம் அதிகரிப்பு.
2 மடங்கு தினசரி செயல்படும் பயனர் எண்ணிக்கை உயர்வு.
4.5 மடங்கு ஆப் பதிவிறக்க எண்ணிக்கை அதிகரிப்பு.

ஜியோஸ்டார், வணிகத்துறை தலைமை - விளம்பர வருவாய், SMB & கிரியேட்டர், இஷான் சட்டர்ஜி கூறும்போது,

"இந்தியாவில் கிரிக்கெட் வெறும் விளையாட்டு அல்ல—அது ஒரு உணர்வு. இது கோடிக்கணக்கான ரசிகர்களை ஒரே இடத்தில் கொண்டு வருகிறது. இந்த ஆய்வு இந்த அதீத ஈடுபாடு விளம்பர சூழலில் எவ்வளவு சக்திவாய்ந்தது என்பதைக் காட்டுகிறது. கிரிக்கெட் நேரடி ஸ்ட்ரீமிங் மூலம் நீளமான விளம்பரங்களுக்குப் பயனுள்ள, செறிவான மற்றும் பிரச்சாரம் செய்யக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கின்றன. மேலும், ICC மேன்ஸ் சேம்பியன்ஸ் டிராபி, TATA WPL, மற்றும் TATA IPL உள்ளிட்ட முக்கிய கிரிக்கெட் போட்டிகளுடன், விளம்பரதாரர்களுக்கு இந்த வாய்ப்பு ஒரு மீளவிட முடியாத சந்தர்ப்பமாக இருக்கும்.”

நியூரான்ஸ் இன்க் ஆசியா நிர்வாக இயக்குநர், ஷிகர் சௌத்ரி கூறுகையில்,

"எங்கள் ஆய்வு மூலம், நேரடி கிரிக்கெட் பார்வையாளர்களின் ஈடுபாடு மற்றும் கவனம் அதிகரிக்கிறது என்பதே உறுதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. கைபேசியில் நேரடி கிரிக்கெட் பார்க்கும் போது விளம்பரங்கள் அதிக நினைவாற்றலை உருவாக்கி, நீளமான விளம்பரங்களுக்கு சிறந்த பிளாட்ஃபாரமாக அமைகிறது. குறிப்பாக, ICC மேன்ஸ் சேம்பியன்ஸ் டிராபி மற்றும் TATA IPL போன்ற பெரிய போட்டிகளின் போது, இந்த விளம்பர வாய்ப்பு அதிக தாக்கத்தை ஏற்படுத்தும்.”

TATA IPL 2025 மார்ச் மாதத்தில் தொடங்கவுள்ள நிலையில், ஜியோஸ்டார் OTT மொபைல் ஸ்ட்ரீமிங் தளம் விளம்பரதாரர்களுக்கு கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்களை எளிதில் அணுக சிறந்த வாய்ப்பை வழங்குகிறது. TATA IPL மட்டுமின்றி, இந்தியா - இங்கிலாந்து இருதரப்பு தொடரும், ICC மேன்ஸ் சேம்பியன்ஸ் டிராபி 2025, TATA மகளிர் பிரிமியர் லீக் 2025 உள்ளிட்ட பல கிரிக்கெட் தொடர்களில் விளம்பரதாரர்கள் அதிக தாக்கமிக்க விளம்பர ஸ்ட்ராடஜிகளை செயல்படுத்தலாம். உயர்தரக் கதையம்சம் மற்றும் விளம்பர முறைகள் மூலம், பிராண்டு அவேர்னஸையும், விற்பனையும் அதிகரிக்கலாம்—இதனால் விளம்பரச் செய்தி, இறுதிப் பந்து வீசப்பட்ட பிறகும் ரசிகர்களின் மனதில் நீண்ட நாட்கள் நிற்கும்!