விவசாயம்

காட்டு பன்றிகள் அட்டகாசம் விவசாயிகள் வேதனை

webteam

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த மோடிக்குப்பம் பகுதியில் வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள வேர்கடலைகளை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்துவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். 

விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள வேர்கடலை செடிகளை இரவு நேரங்களில் தோட்டத்தில் கூட்டமாக புகும் காட்டுபன்றிகள், வேருடன் தோண்டி எடுத்து சேதப்படுத்துகின்றன. இதனால் நிலங்கள் முழுவதும் பெரிய அளவில் பள்ளங்கள் ஏற்படுகின்றன. பன்றிகளின் அட்டகாசத்தால் பயிரிடப்பட்டுள்ள வேர்கடலை முழுவதுமாக வீணாகிறது என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

விளை நிலங்களுக்குள் புகும் பன்றி கூட்டங்களை தடுக்க முயன்றால், மனிதர்களை அவை தாக்குகின்றன எனவும் அச்ச உணர்வுடன் இரவு முழுவதும் மேளங்கள் அடித்தும், பட்டாசுகள் வெடித்தும் சப்தம் எழுப்பினாலும், பன்றிகளின் அட்டகாசம் தொடர்வதாகவும் அப்பகுதி மக்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.