விவசாயம்

ஹைட்ரோ கார்பன் திட்டம் என்றால் என்ன? இதனை எதிர்ப்பது ஏன்?

Rasus

ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம் என்றால் என்ன? இந்த திட்டத்தை மக்கள் எதிர்ப்பதற்கான காரணங்கள் என்ன? என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.

கார்பன் மற்றும் ஹைட்ரஜனை மட்டும் உள்ளடக்கியது ஹைட்ரோ கார்பன். இந்த ஹைட்ரோ கார்பன்கள் ஆக்சிஜன் உதவியோடு எரிபொருளாக பயன்படுகிறது. பெட்ரோலியம், நிலக்கரி, எரிவாயு, மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு, நாஃப்தா, ஷேல் எரிவாயு போன்றவற்றின் ஒட்டுமொத்த வடிவமே ஹைட்ரோ கார்பன்கள் தான். பூமிக்கடியில் இந்த ஹைட்ரோ கார்பன்கள் புதைந்திருப்பதாக கண்டறியப்பட்ட 31 இடங்களில் தமிழகத்தில் நெடுவாசலும் ஒன்று.

நெடுவாசலில் கடந்த 2006-ஆம் ஆண்டே இதற்கான பணிகள் தொடங்கிவிட்டன. நெடுவாசலை மையமாகக்கொண்டு வடகாடு, வானக்கன்காடு, கோட்டைக்காடு, கருக்காக்குறிச்சி ஆகிய ஊர்களில் துளையிட்டு ஆய்வுப்பணிகள் நடந்திருக்கின்றன.

இந்த திட்டத்தில் 6,000 அடிக்கு ஆழ்துளையிட்டு பூமிக்கடியில் இருக்கும் ஹைட்ரோ கார்பன் எடுக்கப்படுகிறது. இதற்காக படிப்படியாக ஒவ்வொரு கட்டங்களாக ஆழ்துளையிடப்படும். இதன் காரணமாக கடல் நீர் உட்புகும் வாய்ப்புகள் மிக அதி‌கம் என்பதே இந்த கிராம மக்‌களின் அச்சம்.

இதன் காரணமாக 21 லட்சம் ஏக்கர் நிலம், உப்பு நிலமாக மாறிவிடக்கூடிய சாத்தியங்கள் மிக அதிகம் உள்ளது என்கிறார்கள் இப்பகுதி மக்கள். இதனால் நெடுவாசலை சுற்றி 100 கிலோமீட்டர் சுற்றளவில் வாழும் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்பதால் இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.