நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியை சேர்ந்தவர் அபிமன்யூ. பட்டதாரியான அபிமன்யூ, தான் படித்த படிப்பிற்கு ஏற்ற சம்பளம் கிடைக்காத காரணத்தால் தன்னை முழுநேர விவசாயியாக மாற்றி கொண்டுள்ளார். இவர் தற்போது பூண்டு மற்றும் காய்கறி விவசாயம் மூலம் நல்ல லாபம் சம்பாதித்து வருவதாக கூறியுள்ளார்.
நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியை சேர்ந்தவர் அபிமன்யூ. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு எம்.பி.ஏ படித்து முடித்த இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். அங்கு அவருக்கு போதிய சம்பளம் கிடைக்கவில்லை. இந்த நிலையில் அவரது தந்தை மசினகுடிபகுதியில் விவசாயம் செய்து வந்துள்ளார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கோவையில் இருந்து மசினகுடி திரும்பிய அபிமன்யூ தனது தந்தையுடன் இணைந்து விவசாயத்தில் ஈடுபட்டார். தற்போது சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் பூண்டு விவசாயம் செய்து அதிக வருமானம் ஈட்டி வருகிறார். பூண்டு கிலோ ஒன்றிக்கு 230 ரூபாய் வரை விலை கிடைப்பதால் போதுமான அளவு லாபம் கிடைப்பதாக பட்டதாரி விவசாயி அபிமன்யூ கூறினார்.
மேலும் தனது விவசாய தோட்டத்தில் காய்கறிகள் மற்றும் ஆரஞ்சு, முள்சீத்தா உள்ளிட்ட பழவகைகளையும் பயிரிட்டுளார். தான் படித்த படிப்பிற்கு கிடைத்த வருமானத்தை விட தற்போது அதிக வருமானத்தை ஈட்டுவதாகவும், 100க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி வருவதாக அபிமன்யூ பெருமையோடு கூறினார்.