விவசாயம்

நீலகிரி, தர்மபுரி மாவட்டங்களில் அரிசிக்கு பதிலாக கேழ்வரகு - தமிழக அரசு அரசாணை

webteam

அரிசிக்கு பதிலாக கேழ்வரகு  வழங்க தமிழக அரசு அரசாணை அறிவிக்கப்பட்டது.

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நீலகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் உள்ள‌ ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் 2 கிலோ ராகி (கேழ்வரகு), அரிசிக்கு பதிலாக வழங்க பரீட்சார்த்தமான முறையில் நடவடிக்கை எடுத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி சட்டப்பேரவையில் உணவுத்துறை மானிய கோரிக்கையின் போது இந்த அறிவிப்பை துறை அமைச்சரான சக்கரபாணி வெளியிட்டார் அதனைக் செயல்வடிவம் கொடுக்கும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது

ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சோதனை அடிப்படையில் அரிசிக்கு பதிலாக ஒரு குடும்பத்திற்கு 2 கிலோ கேழ்வரகு இலவசமாக வழங்கப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது அதனை செயல்படுத்தும் வகையில் நீலகிரி மற்றும் தர்மபுரி 1360 மெட்ரிக் டன் கேழ்வரகு தேவைப்படுகிறது விருப்பத்தின் பெயரில் அரிசிக்கு பதிலாக கோதுமை வழங்கப்பட்டு வருகிறது. கோதுமை ஒதுக்கீட்டை சரிசெய்ய இந்திய உணவு கழகத்திடம் இருந்து நுகர்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையர் ராகியை பெறலாம் என்று பரிந்துரை செய்துள்ளார்

அந்தப் பரிந்துரையை ஏற்று நீலகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் உள்ள நியாய விலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் விருப்பத்தின் பெயரில் அரிசிக்கு பதிலாக ராகி வழங்க நிர்வாக அனுமதி தமிழக அரசால் வழங்கப்படுகிறது. பரீட்சார்த்த முறை என்று அடிப்படையில் ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்ய விருப்பத்தின் பெயரில் நீலகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளில் அரிசிக்கு பதிலாக குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் 2 கிலோ ராகி இலவசமாக வழங்கப்படும் என்று அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செய்தியாளர் - எம்.ரமேஷ்