ஒன்றிய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதுமிலிருந்து திரண்ட விவசாயிகள் டெல்லி நகர எல்லையில் கால வரையின்றி போராடி வருகின்றனர். இந்நிலையில் டெல்லி நகரில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் விவசாயிகள் போராட்டம் நடத்த டெல்லி அரசு அனுமதி அளித்துள்ளது.
நாளை முதல் வரும் ஆகஸ்ட் 9 வரையில் போராட்டம் நடத்த அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு அனுமதி வழங்கியுள்ளது. கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் எனவும் டெல்லி அரசு போராட்டத்தில் பங்கேற்கும் விவசாயிகளிடம் கேட்டுக் கொண்டுள்ளது.
தற்போது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் அதற்கு அருகிலேயே நடைபெறும் விவசாயிகளின் போராட்டம் அனலை கிளப்ப வாய்ப்புகள் உள்ளன.