நவம்பர் 20 ஆம் தேதி 5 லட்சம் விவசாயிகள் இணைந்து நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவுள்ளதாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாகண்ணு தெரிவித்தார்.
காவிரி மேலாண்மை வாரியம், விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, அய்யாகண்ணு தலைமையில் டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் போராட்டத்தை நிறைவு செய்த அவர்கள், சென்னை திரும்பினர். அப்போது போராட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அய்யாக்கண்ணு, எந்த அரசியல் கட்சிகளையும் நம்பி போராட்டத்தில் ஈடுபடவில்லை என்றும், தங்கள் போராட்டம் வெற்றிபெறும் என்றும் கூறினார். மேலும், தாங்கள் நடத்திய போராட்டத்திற்கு இந்தியா முழுவதும் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதாகவும், வரும் நவம்பர் 20ஆம் தேதி 5 லட்சம் விவசாயிகள் இணைந்து டெல்லில் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் செய்ய இருப்பதாகவும் கூறினார்.