கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மீண்டும் போராட்டத்தில் ஈடுபட, தேசிய தென்னிந்திய விவசாயிகள் சங்க விவசாயிகள் திருச்சியிலிருந்து டெல்லி புறப்பட்டனர். இதற்காக விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் திருச்சியிலிருந்து ரயில் மூலம் டெல்லி புறப்பட்டனர்.
வறட்சி நிவாரணம், கடன் தள்ளுபடி, நதிநீர் இணைப்பு, விவசாயிகளுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் மீண்டும் போராட்டத்தை தொடங்க உள்ளதாகத் தெரிவித்தனர். அப்போது தப்பாட்டம் திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஆதம்பாவா, போராட்டத்தில் பங்குபெற்று உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாயை வழங்கினார்.