விவசாயம்

ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்ட ஏல அறிவிக்கையை நிறுத்தவேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

Veeramani

டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான ஏல அறிவிக்கையை திரும்பப்பெறக் கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “காவிரி டெல்டா மண்டலத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தின் ஏல அறிவிக்கையை நிறுத்த வேண்டும். பெட்ரோலியத்துறை அமைச்சகம் ஏலம் விட்டாலும் தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்காது. விவசாய பெருங்குடி மக்களின் நலனையும், காவிரி படுகை வளத்தையும் கண்ணை இமை காப்பது போது தமிழக அரசு காக்கும். அதனால் எதிர்காலத்தில் தமிழகத்தின் எந்த பகுதியையும் ஹைட்ரோகார்பன் ஏலத்துக்காக அறிவிக்கக்கூடாது” என தெரிவித்திருக்கிறார்

முன்பாக புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் அருகே உள்ள கருக்காய்குறிச்சி வடத்தெருவில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய பெட்ரோலிய அமைச்சகம் சர்வதேச ஏலத்திற்கு அழைப்பானை விடுத்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அரைநிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர்.