விவசாயம்

”நெற்பயிர் காப்பீடு குறித்து அவதூறு பரப்புகிறார்கள்” - அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம்

kaleelrahman

 காழ்ப்புணர்ச்சி காரணமாக நெற்பயிர் காப்பீடு குறித்து அவதூறு பரப்புகிறார்கள் என்று தமிழக வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், “அரசை குறைகூறி அறிக்கை விடுபவர்கள் சாதாரணமாக குறைகூறி விடுகிறார்கள். குறுவை சாகுபடியை பொருத்தவரையில் தமிழகம் மற்றும் டெல்டா பகுதிகளில் 655 கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு குறுவை நெல்லை சாகுபடி செய்ய 3,27,350 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நேரத்தில் விவசாயிகளை எப்படி காப்பீடு தொகையை கட்ட சொல்ல முடியும். குறுவை முடிந்து சம்பா நடவு பணிகள் தொடங்கியுள்ளது. இதற்கு காப்பீடு தொகை எவ்வளவு கட்டுவதென்று அறிவிக்கப்படும். பின்னர் நடைமுறை துவக்கப்படும். பயிர்களுக்கு காப்பீடு இல்லாவிட்டாலும், பேரிடர் காலங்களில் குறுவை பயிர் பாதிக்கப்பட்டிருந்தால், அதற்கான இழப்பீடு பேரிடர் நிவாரணம் மூலமாக வழங்கப்படும் என்று ஏற்கெனவே முதல்வர் ஆணையிட்டுள்ளார்.

குறுவை பயிர் அறுவடை முடிந்த நிலையில், இதுவரை குறுவை சாகுபடி செய்தவர்கள் யாரும் இழப்பீடு கேட்கவில்லை. இந்நிலையில் காப்பீடு தொகைக்கு ப்ரீமியம் கட்ட முடியுமா வரும் 31ஆம் தேதிக்குள் குறுவை பயிருக்கு காப்பீடு ப்ரீமியம் கட்ட வேண்டும். ஆனால், இப்போது காப்பீடு கட்டமுடியாத சூழ்நிலை இருப்பதால் தவறாக ஒரு அரசு மீது காழ்ப்புணர்ச்சியோடு குற்றம் சாட்டுகின்றார்கள்.

அரசு மீது தேவையில்லாமல் இதுபோன்ற அறிக்கை விடுகின்றவர்கள் உண்மை நிலவரம் புரியாமல் பழியை சுமத்துகின்றார்கள். வேளாண்மைத் துறைக்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற அரசாக இந்த அரசு இருக்கிறது. முதல்வரை அழைத்து பாராட்டாவிட்டாலும் அவர் மீது குறைசொல்வதை விவசாயிகள் அவர்களது கூற்றை ஏற்க மாட்டார்கள்” என்று கூறினார்.