விவசாயம்

சீர்காழி: நவீன கருவியை பயன்படுத்தி நெல் விதைப்பில் ஈடுபட்ட பொறியியல் பட்டதாரி சகோதரர்கள்

kaleelrahman

சீர்காழி அருகே ஆயுத பூஜையை முன்னிட்டு நவீன நெல் விதைப்பு கருவி மூலம் பொறியியல் பட்டதாரி சகோதரர்கள் சம்பா சாகுபடி பணியை துவங்கினர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே குன்னம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சந்திரபிரகாஷ், ஜெகதீஷ்,சபரீஷ். பொறியியல் பட்டம் பெற்றுள்ள இவர்கள் இருவரும் தங்களுக்குச் சொந்தமான 12 ஏக்கர் நிலத்தில் நவீன விவசாய கருவிகள் உதவியுடன் சம்பா சாகுபடி பணியை தொடங்கினர்.

நேரடி நெல் விதைப்பில் சம்பா சாகுபடியை துவங்கிய நிலையில் விதைப்புக்காக (டிரம் சீடர்) உருளை விதைப்பான் என்ற நவீன கருவியை பயன்படுத்தியுள்ளனர். இதனால் 1 ஏக்கர் விதைப்புக்கு 7 கிலோ விதைநெல் மட்டுமே பயன்படுத்தபட்டுள்ளது. சாதாரணமாக கையால் தெளிக்கும் போது ஏக்கருக்கு 25 முதல் 30 கிலோ வரை விதை நெல் தேவைபடும்,

இந்நிலையில் (டிரம் சீடர்) உருளை விதைப்பான் மூலம் விதைக்கும் போது சீரான இடைவெளியில் நடவு செய்யப்பட்டது போலவே விதைகள் தொளிக்கபடுவதால் களைகள் இல்லாமல், ஆட்கள் தேவை குறைந்து கூடுதல் மகசூல் கிடைக்கும் எனவும் பொறியியல் சகோதரர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். அதே நேரம் நவீன கருவிகளை விவசாயிளுக்கு அரசு மானிய விலையில் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.