விவசாயம்

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக ராஜஸ்தான் அரசு புதிய மசோதா

Veeramani

சமீபத்தில் மத்திய அரசால் இயற்றப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக ராஜஸ்தான் அரசு மூன்று மசோதாக்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் தலைமையிலான ராஜஸ்தான் அரசாங்கம் இன்று சட்டசபையில் மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை நிராகரிக்கும் மூன்று மசோதாக்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் அமைச்சர் சாந்தி தரிவால் இந்த மூன்று மசோதாக்களை மாநில சட்டசபையில் அறிமுகப்படுத்தினார். மத்திய அரசின் பண்ணை சட்டங்களை நிராகரிக்கும் தீர்மானத்தை பஞ்சாப் சட்டமன்றம் கொண்டு வந்து அவற்றை மறுக்கும் மசோதாக்களை நிறைவேற்றிய பின்னர் இப்போது ராஜஸ்தானும் அதுபோன்ற மசோதாக்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

மத்திய அரசின் மூன்று வேளாண் பண்ணைய சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் விவசாயிகள் கடுமையான போராட்டங்களை நடத்திவருகின்றனர்.