விவசாயம்

திடீரென உயர்ந்திருக்கும் உரங்களின் விலையைக் குறைக்க வேண்டும்: தினகரன் கோரிக்கை

திடீரென உயர்ந்திருக்கும் உரங்களின் விலையைக் குறைக்க வேண்டும்: தினகரன் கோரிக்கை

Veeramani

திடீரென உயர்ந்திருக்கும் பொட்டாஷ் உள்ளிட்ட உரங்களின் விலையைக் குறைக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கோரிக்கை வைத்துள்ளார்.

இது தொடர்பாக டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “காவிரி டெல்டா உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்பட்டிருக்கும் உரத்தட்டுப்பாட்டைச் சரி செய்ய தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். திடீரென உயர்ந்திருக்கும் பொட்டாஷ் உள்ளிட்ட உரங்களின் விலையைக் குறைப்பதும் அவசியம்.

பயிர்கள் வளர்ந்து வரும் நேரத்தில் ஏற்பட்டிருக்கும் உரம் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு விவசாயிகளைக் கவலையடைய செய்திருக்கிறது. இந்தக் கவலையைப் போக்க வேண்டிய கடமை தமிழக அரசுக்கு இருக்கிறது என்பதை மறந்து விடக் கூடாது” என தெரிவித்திருக்கிறார்.