விவசாயம்

நாமக்கல்: ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பதால் நேரமும் செலவும் குறைவதாக விவசாயிகள் கருத்து

நாமக்கல்: ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பதால் நேரமும் செலவும் குறைவதாக விவசாயிகள் கருத்து

kaleelrahman

நாமக்கல் அருகே ட்ரோனை பயன்படுத்தி மரவள்ளி பயிருக்கு மருந்து தெளிக்கும் விவசாயிகள், நவீன தொழில்நுட்பம் நேரத்தையும், மருந்து செலவையும் குறைப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் மோகனூர், வளையப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மரவள்ளி, பருத்தி, வாழை உள்ளிட்ட பயிர்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக மோகனூர், ஒருவந்தூர், சங்கரம்பாளையம் செல்லியம்பாளையம், வடுகப்பட்டி, உன்னியூர், கிடாரம், ஒருவந்தூர் புதூர், கொங்கு நகர் ஆகிய பகுதிகளில் சுமார் 3 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் மரவள்ளி பயிரிடப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஆண்டு தோறும் மரவள்ளி, பருத்தி, வாழை பயிரிடும் போது பூச்சிகள் அதிகம் தாக்கி வந்த நிலையில், பூச்சிகளை கட்டுப்படுத்த விவசாயிகள் தொடர்ந்து பூச்சி கொல்லி மருந்துகளை தெளித்து வந்தனர். இந்நிலையில் இப்பகுதியில் விவசாயிகள் நவீன ட்ரோன் பயன்படுத்தி மருந்து தெளிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பதால் நேரம் பாதி அளவாக குறைவதோடு மருந்து செலவும் வெகுவாக குறைவதாகவும் அதாவது ஒரு ஏக்கருக்கு தெளிக்கும் மருந்தை 2 ஏக்கருக்கு தெளிப்பதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.