விவசாயம்

வெள்ள நீரால் 10,000 ஏக்கர் பயிர்கள் நாசம்: விவசாயிகள் கவலை

வெள்ள நீரால் 10,000 ஏக்கர் பயிர்கள் நாசம்: விவசாயிகள் கவலை

webteam

நாகையில் வெள்ள நீர் வடியாததால் 10 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வருந்துகின்றனர். 

நாகை மாவட்டம் வேதாரண்யம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்மழை பெய்து வந்தது. இதையடுத்து மழைவிட்டு பத்து நாட்களுக்கு மேல் ஆகியும் வடமழை, மணக்காடு, பிராந்தியங்கரை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் அழுகி பாதிப்படைந்துள்ளன.

இப்பகுதிகளிலுள்ள வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரப்படாததே வெள்ளநீர் வடியாமல் இருக்கக் காரண‌ம் என அப்பகுதி விவசாயிகள் குறை கூறுகின்றனர். எனவே, சேதமடைந்துள்ள பயிர்களைக் கணக்கெடுத்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.