விவசாயம்

முல்லை பெரியாறு அணை விவகாரம் - மதுரையில் விவசாயிகள் போராட்டம்

முல்லை பெரியாறு அணை விவகாரம் - மதுரையில் விவசாயிகள் போராட்டம்

Veeramani

முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசைக் கண்டித்து மதுரை மாவட்டம் மேலூரில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முல்லை பெரியாறு அணை பலவீனமாக உள்ளதாக கேரள அரசு பொய்ப்பிரச்சாரம் செய்வதாகவும், முல்லை பெரியாறு அணை பகுதியில் கேரள அரசியல்வாதிகள் அத்துமீறி நுழைந்ததாகவும் விவசாயிகள் குற்றஞ்சாட்டினர். 152 அடிவரை நீரை தேக்க வேண்டும், மத்திய தொழிலக படையின் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர். மதுரையின் பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி ராமநாதபுரம், தேனி, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இருந்தும் வாகனங்களில் பேரணியாக வந்து திரளான விவசாயிகள், பொதுமக்கள் போராட்டத்தில் கலந்துகொண்டனர். விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் 62 கிராமங்களில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன.