Farmers
Farmers pt desk
விவசாயம்

மயிலாடுதுறை: அறுவடைக்குத் தயாராக இருந்த 30 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதம்!

webteam

செய்தியாளர்கள்: மோகன் மற்றும் ராஜாராம்

சீர்காழியில் 23 சென்டி மீட்டரும், கொள்ளிடத்தில் 19 சென்டி மீட்டரும் மயிலாடுதுறையில் 10 சென்டி மீட்டருக்கு அதிகமாகவும் மணல்மேட்டில் 11 சென்டி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பாண்டு ஒரு லட்சத்து 70 ஆயிரம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

farmer

தரங்கம்பாடி, மயிலாடுதுறை, குத்தாலம், சீர்காழி ஆகிய தாலுகாக்களில் அறுவடைக்குத் தயாராக உள்ள சுமார் 25 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன. சீர்காழி, கொள்ளிடம், பூம்புகார், தரங்கம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் 8,000 ஏக்கர் சம்பா பயிர்கள் சாய்ந்து தண்ணீரில் மூழ்கியுள்ளன. 10 முதல் 15 தினங்களில் அறுவடைக்கு தயாரான பயிர்கள் தண்ணீரில் சாய்ந்து மூழ்கியதால் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.

தரங்கம்பாடியை அடுத்த கொடைவிளாகம் கிராமத்தில் தொடர் மழையின் காரணமாக சுமார் 500 ஏக்கரில் பயிரிடப்பட்ட சம்பா நெற்பயிர்கள் வயலில் சாய்ந்தன. தரங்கம்பாடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கன மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது.

farmers

காழியப்பநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட ரத்தினம் நகர், புதுத்தெரு, என்.என்.சாவடி மெயின் ரோடு உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் அப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் அவதியுற்று வருகின்றனர்.