Farmer
Farmer pt desk
விவசாயம்

கொடைக்கானல்: அழிந்து வரும் மலை நெல் விவசாயத்தை மீட்டெடுக்கும் மூத்த விவசாயி...

webteam

செய்தியாளர் : செல்வ. மகேஷ் ராஜா

________

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலை, பூண்டி கிராமத்தில் வசிக்கும் சுப்பிரமணி (90) என்ற விவசாயி, மலை நெல் விவசாயத்தை, தனது வாழ்நாள் முழுவதும் விடாமல் தொடர்ந்து செய்து வருகிறார். சங்க காலங்களில், கொடைக்கானல் மலைப்பகுதிகளில், திணை பயிர்களும், அதன் பின்னர் நெற்பயிர்களுமே, விளையக்கூடிய பூமியாக இருந்த வயல் வெளிகள், தற்போது வீரிய வகை, காய்கறி விவசாயத்திற்கு மாறியுள்ளது.

Paddy

ஆனால், விவசாயி சுப்பிரமணி மலை நெல் விவசாயத்தை விடாமல், தொடர்ந்து விதை நெல் பெருக்கத்திற்காக, தனது வாழ்நாள் முழுவதும் பாடுபட்டுள்ளார், இந்நிலையில், கடந்த பத்தாண்டுகளாக, தங்கள் குடும்பத்தின் உணவு தேவைக்காக, மலை நெற்பயிர் விவசாயத்தை தனது மகன்களின் உதவியுடன் செய்து வருகிறார். தற்போது சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவிற்கு மலை நெற்பயிர் விளைச்சல் பரப்பை, விரிவுபடுத்தியுள்ளார்.

8 மாதங்கள் வரப்பில் நின்று, 5 அடி உயரம் வரை வளரும் மலை நெற்பயிரை, ரசாயன உரங்கள், மருந்துகள் ஏதுமின்றி சாம்பல், சாணம் உள்ளிட்ட இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்துவதால் மலை நெல் சத்து மிகுந்ததாக பார்க்கப்படுகிறது. சிவப்பு நெல், செங்குருவை, மலை நெல் என பல பெயர்களில் அழைக்கப்படும், இந்த மலை நெல் சாகுபடி பரப்பை அதிகரிக்க, அரசு முயற்சிக்க வேண்டும் என்பதே, காலத்தின் தேவையாக உள்ளது.