கல்லணையிலிருந்து நீர் திறக்கப்பட்டுள்ளதால் சுமார் 5 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுவுள்ளது.
கல்லணையில் திறக்கப்பட்ட காவிரி நீர் திருவாரூர் மாவட்டத்தை வந்தடைந்தது. இதனால் திருவாரூர், நாகை மாவட்டங்களில் 5 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. தமிழக விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கடந்த 2ஆம் தேதி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை திறக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்திலுள்ள மூணாம் தலைப்பிற்கு காவிரி நீர் இன்று வந்தடைந்தது. இதனையடுத்து மூணாம் தலைப்பு மதகுகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் திறந்துவைத்தனர்.