விவசாயம்

வேளாண் பட்ஜெட்: ஒரு டன் கரும்பு கொள்முதல் விலை ரூ. 2,750-ல் இருந்து ரூ.2,900 ஆக அதிகரிப்பு

JustinDurai
கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை டன் ஒன்றுக்கு ரூ.42.50 வழங்கப்படும் என்று வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை வரலாற்றில், முதல் முறையாக வேளாண்மை துறைக்கு தனி பட்ஜெட் தாக்கலாகியுள்ளது. வேளாண்மை துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், வேளாண் துறைக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக, கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. 2020-2021 நிதியாண்டில் ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கான ஊக்கத்தொகைக்கு ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை டன் ஒன்றுக்கு ரூ.42.50 வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கரும்பின் பிழிதிறனை அதிகரிக்கும் வகையில் சிறப்புத் திட்டத்திற்கு ரூ. 2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கரும்பு கொள்முதல் விலை டன் ஒன்றுக்கு ரூ. 2,750-ல் இருந்து ரூ.2,900 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.