விலைவாசி ஏற்றத்தை கருத்தில்கொண்டு காய்கறி சந்தைகளை முறைப்படுத்த வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாயிகளின் விளைப்பொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டியது அரசின் கடமை என குறிப்பிட்டுள்ளார். காய்கறிகளின் விலை உயர்ந்துகொண்டே செல்லும் தருணத்தில் விவசாயிகள் பெரிய அளவில் பயனடையவில்லை என்பதே யதார்த்தம் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
காய்கறிகளை உற்பத்தி செய்யும் இடத்திற்கும், வெளி சந்தைக்குமான விலை வித்தியாசம் இரண்டு முதல் மூன்று மடங்கு வரை இருப்பதை உதாரணங்களுடன் சுட்டிக்காட்டியுள்ள அவர், காய்கறி விலையேற்றத்தால் இடைத்தரகர்களே அதிக பயனடைவதாகக் குறிப்பிட்டுள்ளார்.