விவசாயம்

கொலை வழக்கில் கடலூர் திமுக எம்.பிக்கு 27 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்

sharpana

முந்திரி ஆலைத் தொழிலாளி கொலை வழக்கில் கடலூர் திமுக எம்.பிக்கு அக்டோபர் 27 ஆம் தேதிவரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார். நாளை பிற்பகல் வரை போலீஸ் காவலுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், இன்றே சிபிசிஐடி விசாரணை நிறைவடைந்துள்ளது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகேயுள்ள மேல்மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த முந்திரி ஆலை தொழிலாளர் கோவிந்தராஜ் திமுக எம்.பி ரமேஷுக்கு சொந்தமான ஆலையில் பணிபுரிந்து வந்துள்ளார். 5 வருடமாக பணிபுரிந்து வரும் கோவிந்தராஜ் சமீபத்தில் பணிக்குச் சென்றபோது மர்மமான முறையில் இறந்துள்ளார்.

”தனது தந்தையை அடித்துக் கொன்றுவிட்டார் ரமேஷ் எம்.பி” என்று கோவிந்தராஜ் மகன் அளித்தப்புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ளனர் காவல்துறையினர்.