விவசாயம்

சர்வர் பிரச்னை: பயிர் காப்பீடு செய்ய முடியாமல் விவசாயிகள் விரக்தி

JustinDurai
கடலூரில் பயிர் காப்பீடு செய்வதற்கு இரவு வரை காத்திருந்த விவசாயிகள் சர்வர் பிரச்னை காரணமாக விரக்தியுடன் திரும்பிச் சென்றனர்.
அண்மையில் பெய்த தொடர் கனமழையால் டெல்டா மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமாயின. இதனிடையே, நெல், உளுந்து உள்ளிட்ட பயிர்களுக்கு காப்பீடு செய்வதற்கு நேற்றுவரை தமிழக அரசு அவகாசம் அளித்திருந்தது. இதனால் அரசு இ சேவை மையங்கள், தனியார் கணினி மையங்களில் விவசாயிகள் காத்திருந்து பயிர் காப்பீடு செய்தனர். விருத்தாசலம் உள்ளிட்ட இடங்களில் இ சேவை மையங்களில் இரவு 10.30 மணி வரை விவசாயிகள் காத்திருந்தனர். எனினும் சர்வர் பிரச்னை ஏற்பட்டதாக மையத்தின் பணியாளர்கள் கூறியதால் காப்பீடு செய்ய முடியாமல் நீண்ட நேரம் காத்திருந்த விவசாயிகள் விரக்தியுடன் திரும்பிச் சென்றனர். மேலும் பயிர் காப்பீடு செய்ய கால அவகாசம் அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.