விவசாயம்

விலைபோகாத உள்ளூர் காய்கறிகள்: விவசாயிகள் வேதனை

விலைபோகாத உள்ளூர் காய்கறிகள்: விவசாயிகள் வேதனை

webteam

தேனி மாவட்டத்தின் கம்பம் பகுதியில், உழவர் சந்தையில், உள்ளூர் காய்கறிகளை மக்கள் அதிகம் வாங்குவதில்லை என விவசாயிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர். 

வெளி மாநிலக் காய்கறிகளை அதிகளவில் வியாபாரிகள் இறக்குமதி செய்து விற்பனை செய்வதால், இந்நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர் விவசாயிகள். இதனால் தங்களுக்குப் பெரும் இழப்பு ஏற்படுவதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

தேனி மாவட்டம் கம்பம், காமயகவுண்டன்பட்டி, கூடலூர், ராயப்பன்பட்டி உள்ளிட்ட பகுதியில் வெண்டை, தக்காளி, பீன்ஸ், வெங்காயம் , பீட்ருட் உள்ளிட்ட தினசரி தேவைக்கான காய்கறிகள் அதிகளவில் பயிரிடப்பட்டு அதனை விற்கும் கூடமாக கம்பத்தில் உழவர்களுக்கென தினசரி உழவர் சந்தை உள்ளது. இந்த சந்தையில் கம்பம் சுற்று வட்டாரபகுதிகளில் மட்டும் விளையும் காய்கறிகள் விற்காமல் வெளிமாநிலங்களில் விளையும் காய்கறிகளை அதிகளவில் இறக்குமதி செய்து விற்பனை செய்வதாகவும் இதனால் உள்ளூரில் விளையும் காய்கறிகள்  விற்பனையாகாமல் வீணாவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.