விவசாயம்

போலீஸ் பாதுகாப்புடன் நெல் விதைப்பை தொடங்கிய விவசாயிகள்.. காரணம் இதுதான்!

Sinekadhara

மயிலாடுதுறை அருகே நேரடி நெல் விதைப்பு தொடர்பாக இரு தரப்பினர் இடையே பிரச்னை இருந்து வருவதால், சில கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, 150க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன் நேரடி நெல் விதைப்பு தொடங்கி நடைபெற்றது.

பருத்திக்குடி கிராமத்தில் விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு செய்தால் வேலைவாய்ப்பு இழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாய கூலி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டார்கள். இதனிடையே பருத்திக்குடி கிராமத்தில் மூன்று விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு செய்ய உள்ளனர்.

இதனால், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தடுக்க, மேல பருத்திக்குடி மற்றும் கீழப் பருத்திக்குடி, காலனி தெரு உள்ளிட்ட ஒரு கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பித்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் யுரேகா உத்தரவிட்டுள்ளார். மேலும் அப்பகுதியில் 150க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அவர்களது பாதுகாப்புடன் நேரடி நெல் விதைப்பு தொடங்கி நடைபெற்றது.