தரமற்ற பூச்சிக்கொல்லி மருந்து மற்றும் உரங்களால் பெரும் இழப்பு ஏற்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளாக போதிய மழை இல்லாத நிலையில், குறைந்தளவு தண்ணீர் செலவாகும் பயிர்களை நெல்லை மாவட்ட விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். இந்தநிலையில், கடைகளில் விற்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகள், உரங்கள் உள்ளிட்டவை தரமற்று இருப்பதாகவும், அதனால் அதிக பொருட்செலவு ஏற்படுவதாகவும் விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
மேலும் 15 நாட்களுக்கு ஒருமுறை பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தப்பட்டு வந்தநிலையில், தற்போது 3 நாட்களுக்கு ஒருமுறை மருந்து பயன்படுத்த வேண்டியுள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர். அனைத்து கடைகளிலும் தரமான பூச்சிக்கொல்லி மருந்துகள் கிடைக்க வேளாண் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.