விவசாயம்

முட்டைக்கோஸ் விலை வீழ்ச்சி - தேனி மாவட்ட விவசாயிகள் கவலை

Veeramani

போதிய விளைச்சல் இருந்தும், தண்டு அழுகல் நோய் காரணமாக முட்டைக்கோஸ் விலை வீழ்ச்சி ஏற்பட்டு, தேனி மாவட்ட விவசாயிகளை கவலை அடையச்செய்துள்ளது.

போடி சுற்றுப்பகுதியில், பல ஏக்கர் பரப்பளவில் முட்டை கோஸ் விவசாயம் நடைபெறுகிறது. கடந்த ஆண்டு 80 கிலோ முட்டைகோஸ் கொண்ட ஒரு மூட்டை, ஆயிரத்து 500 ரூபாய் வரை விலை போனதாகவும், தற்பொழுது 600 ரூபாய்க்கு விற்பதே சிரமமாக இருப்பதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

எனவே, தமிழக அரசு காய்கறிகளுக்கு உரிய விலை நிர்ணயம் செய்து, தங்கள் வாழ்வாதாரத்தைக் காத்திட வேண்டும் என, விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.