விவசாயம்

லட்சத்திற்கு மேல் ஏலம் விடப்பட்ட பட்டுக்கூடுகள்

webteam

தருமபுரி, அரசு பட்டுக்கூடு ஏல அங்காடியில் 4 ஆயிரத்து 401 கிலோ வெள்ளை மற்றும் மஞ்சள் பட்டுக்கூடு விற்கப்பட்டதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

தமிழகத்தில் ராமநாதபுரம், கன்னியாகுமரி, மதுரை, ஈரோடு, திருவண்ணாமலை, விழுப்புரம், உள்ளிட்ட மாவட்டங்களில் 34,793 ஏக்கரில் 21,415 விவசாயிகள் பட்டுத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் உற்பத்தி செய்யும் பட்டுக்கூடுகளை குறிப்பிட்ட இடங்களில் செயல்படும் அரசு பட்டுக்கூடு ஏல அங்காடியில் விற்பனை செய்வது வழக்கம். அந்த வகையில் தருமபுரி, அரசு பட்டுக்கூடு ஏல அங்காடியில் கடந்த 1ஆம் தேதி அதிகபட்சமாக 2 ஆயிரத்து 128 கிலோ பட்டுக்கூடு ஏலம் போயின.

இன்று அதையும் தாண்டி 4 ஆயிரத்து 401 கிலோ வெண்பட்டுகள் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளன. பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட வெண்பட்டுக்கூடுகள் சில நாட்களுக்குள் 20 லட்சத்து 99 ஆயிரத்திற்கு விற்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.